சினிமா செய்திகள்

“ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்” - இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் + "||" + The hashtag "Ottunnu Potta is for Rajinikanth" is a trending hashtag on Twitter in India

“ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்” - இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

“ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்” - இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்
ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
சென்னை, 

சமூக ஊடகங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன் ரஜினி எழுதிய கடிதம் என ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரவியது. அக்கடிதத்தில், ரஜினியின் உடல்நலக் குறைவு குறித்தும், தற்போதைய கொரோனா காலத்தில் ரஜினி மக்களை சந்தித்து அரசியல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், அரசியல் கட்சி தொடங்கும் முன்பே ரஜினி அதனை கைவிட திட்டமிட்டுள்ளது போன்ற கருத்து பரவியது. 

இந்தசூழலில் என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் “#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.