சினிமா செய்திகள்

ஓட்டல் அறையில் இருந்து அலறி அடித்து ஓடிய சுசீத்ராவால் பரபரப்பு + "||" + Excitement by Suchitra who ran screaming from the hotel room

ஓட்டல் அறையில் இருந்து அலறி அடித்து ஓடிய சுசீத்ராவால் பரபரப்பு

ஓட்டல் அறையில் இருந்து அலறி அடித்து ஓடிய சுசீத்ராவால் பரபரப்பு
தன்னை யாரோ கொலை செய்யவருவதாக ஓட்டல் இருந்து அறையில் இருந்து அலறி ஓடிய பாடகி சுசித்ராவால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவர் ஒரு தனியார் ஓட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது ஒரு பரபரப்பான செய்தி வைரலாகி வருகிறது. அதாவது பாடகி சுசித்ரா ஓட்டல் அறையில் இருந்து தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக, கத்திக்கொண்டே வரவேற்பறைக்கு ஓடியதாகவும், அவரது அறை கதவை சிலர் தட்டியதாகவும் அருகில் இருந்தவர்கள் அதை பார்த்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. 

ஓட்டல் நிர்வாகத்தினர் அளித்த தகவலின் படி விரைந்து வந்த பிக் பாஸ் தயாரிப்புக் குழு, சுசித்ராவை சமாதானம் செய்ததாகத் தெரிகிறது. நள்ளிரவுக்குப் பின்னரே சுசித்ரா மீண்டும் தனது அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

சுசிலீக்ஸ் என்ற பெயரில் திரைப்பிரபலங்கள் பலரின் அந்தரங்க வாழ்க்கை பற்றிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் சுசித்ரா. இது தவிர தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடும் கருத்துக்களாலும் சர்ச்சைகளில் சிக்கினார். எனவே இவரது வருகையால் பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் பல பரபரப்பான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.