பிரபல டைரக்டர் மரணம்


பிரபல டைரக்டர் மரணம்
x
தினத்தந்தி 1 Nov 2020 9:30 PM GMT (Updated: 1 Nov 2020 6:14 PM GMT)

கன்னடத்தில் பானுப்பிரியா நடித்த சத்ரபதி படத்தை இயக்கி பிரபலமானார். மேலும் சில படங்களை டைரக்டு செய்துள்ளார்.

பிரபல கன்னட இயக்குனரும், தயாரிப்பாளருமான தினேஷ் காந்திக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. தினேஷ் காந்தி கன்னடத்தில் பானுப்பிரியா நடித்த சத்ரபதி படத்தை இயக்கி பிரபலமானார். மேலும் சில படங்களை டைரக்டு செய்துள்ளார். அடுத்து தனது மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி புதிய படத்தை இயக்க தயாராகி வந்தார். கொரோனாவால் இதன் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. சுதீப், ராகிணி திவேதி நடித்த வீர மடகாரி படத்தை தயாரித்துள்ளார். இது ராஜமவுலி இயக்கி தெலுங்கில் வெற்றி பெற்ற விக்ரமார்குடு படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் விக்ரமன், இயக்கத்தில் வெளியான பிரியமான தோழி படத்தை கன்னடத்தில் ரவிச்சந்திரன், பிரகாஷ் ராஜ், நமீதா ஆகியோர் நடிக்க ஹூ என்ற பெயரில் ரீமேக் செய்து தயாரித்தார். தினேஷ் காந்தி மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story