சினிமா செய்திகள்

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது; மனுஸ்மிருதி குறித்த போராட்டம் தேவையில்லாதது -கமல்ஹாசன் + "||" + denial of permission for the VEL pilgrimage is welcome The struggle over Manusmriti is unnecessary

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது; மனுஸ்மிருதி குறித்த போராட்டம் தேவையில்லாதது -கமல்ஹாசன்

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது; மனுஸ்மிருதி குறித்த போராட்டம் தேவையில்லாதது -கமல்ஹாசன்
மனுஸ்மிருதி குறித்து போராட்டம் நடத்துவது தேவையில்லாதது; மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம்; நான் நாத்திக வாதி அல்ல; நான் பகுத்தறிவாளன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை தியாகராயநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது தெம்பாக இருந்தது. அரசியல் பற்றி ரஜினியும் நானும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அவரது நிலைப்பாடு எனக்குத் தெரியும். தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக நாங்கள் உருவெடுத்திருக்கிறோம். கூட்டணி குறித்து பேட வேண்டிய காலம் இது இல்லை.

நல்லவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் வரும் பட்சத்தில் அவர்களுடன் நிச்சயமாக நாங்கள் கூட்டணி வைப்போம். அப்போது மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணியாக இருக்காது. முதல் அணியாக இருக்கும்.

நல்லவர்களுடன் தான் கூட்டணி; மக்கள் நீதி மய்யம் தான் தமிழகத்தின் 3 வது பெரிய கட்சி; மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும்; எங்கள் அரசு வழிகாட்டும் அரசு; பழிவாங்கும் அரசாக இருக்கும்.

மக்கள் நீதி மய்ய அரசியல் வியூகம் நேர்மைதான். 1,00,000 நபர்கள் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள். எங்கள் அரசியல் பழிகூடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல.

ரஜினிகாந்த் உடல்நிலையை பார்க்க வேண்டும்; அதே நேரத்தில் நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.ஆனால் என்னைப்பொருத்தவரை அவர் உடல்நிலையை பார்க்கவேண்டும்.இது குறித்து முடிவு செய்யவேண்டியது நான் அல்ல.

மனுஸ்மிருதி குறித்து போராட்டம் நடத்துவது தேவையில்லாதது; மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம்; நான் நாத்திக வாதி அல்ல; நான் பகுத்தறிவாளன்.

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது. வேலை வாங்கி கொடுப்பதே எனது வேலை. தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம் என கூறினார்.

தேர்தலை சந்திக்கும் விதமாக நவம்பர் 26, 27 தேதிகளில் கமல்ஹாசன் திருச்சி மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும் டிசம்பர் 12 , 13 ஆகிய தேதிகளில் கோவை சேலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஆஸ்பத்திரியில் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை: நலமாக இருப்பதாக டாக்டர் தகவல்
சென்னை ஆஸ்பத்திரியில் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
2. நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்: கமல்ஹாசன்
நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
3. தமிழகத்தில் பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் - பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி
தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறி உள்ளார்.
4. நீர்மேலாண்மையில் கோவை முன்னோடியாக விளங்குகிறது: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்
நீர்மேலாண்மையில் முன்னோடியாக கோவை விளங்குகிறது என்று கோவையில் நேற்று நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார்.
5. ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல - கமல்ஹாசன்
ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.