நடிகைகள் புதிய சம்பள பட்டியல் - முதல் இடத்தில் நயன்தாரா


நடிகைகள் புதிய சம்பள பட்டியல் - முதல் இடத்தில் நயன்தாரா
x
தினத்தந்தி 11 Nov 2020 12:25 AM GMT (Updated: 11 Nov 2020 12:25 AM GMT)

நடிகைகள் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் நயன்தாரா ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.


கதாநாயகிகள் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடுகிறது. படம் வெற்றி பெற்றால் அவர்களாக கூட்டுவதும் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்களே குறைத்து விடுவதும் வழக்கம். கொரோனா ஊரடங்குக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் நயன்தாரா ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதால் சம்பளம் ஏறி உள்ளது. அவரது நடிப்பில் தயாராகி உள்ள மூக்குத்தி அம்மன் தீபாவளி பண்டிகையில் ஓ.டி.டி தளத்தில் வருகிறது. நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் காஜல் அகர்வால் இருக்கிறார். அவர் வாங்கும் சம்பளம் ரூ.2 கோடி. திரிஷா, தமன்னா, எமிஜாக்சன் ஆகிய மூன்று பேரும் ரூ.1.50 கோடியும், சுருதிஹாசன் ரூ.1 கோடியும், கீர்த்தி சுரேஷ் ரூ.80 லட்சமும், அஞ்சலி ரூ.70 லட்சமும், ரெஜினா ரூ.60 லட்சமும், ஸ்ரேயா ரூ.50 லட்சமும் பெறுகிறார்கள். ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் சம்பளத்தை ரூ.40 லட்சம் என்று நிர்ணயித்து உள்ளனர். நிவேதா தாமஸ், மஞ்சுமா மோகன் ஆகியோர் ரூ.35 லட்சமும், பிரணிதா, பாவனா ஆகியோர் ரூ.30 லட்சமும், அனுபமா பரமேஸ்வரன் ரூ.25 லட்சம் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ரூ.10 லட்சம் வீதமும் நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story