ஐபிஎல் 9-வது அணியை வாங்க மோகன் லால் - சல்மான் கான் மற்றும் தொழில் அதிபர்களிடையே போட்டி + "||" + IPL 2021: Mohanlal, Salman Khan in bid to buy ninth team? Speculations grow
ஐபிஎல் 9-வது அணியை வாங்க மோகன் லால் - சல்மான் கான் மற்றும் தொழில் அதிபர்களிடையே போட்டி
ஐபிஎல் 9 வது அணியை வாங்க மோகன் லால் - சல்மான் கான் மற்றும் தொழில் அதிபர்களிடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.
மும்பை
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொரோனா காலத்திலும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும், புதிய அணிக்கான டெண்டர் விவரம் தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் அணியை வாங்க நடிகர் மோகன் லாலும், பைஜூஸ் நிறுவனமும் போட்டியிடுவதாக மற்றொரு தகவல் கூறுகிறது.
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின் படி புதிதாக வர இருக்கும் இந்த அணியை மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன் லால் தான் வாங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.அந்த புதிய அணி அகமதாபாத் அல்லது குஜராத்தை சார்ந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த அணியை ஏலம் எடுக்க தொழில் அதிபர்கள் சினிமா நட்சத்திரங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது
நாட்டின் சிறந்த தொழில் அதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி இந்த அணியை வாங்க போட்டியில் உள்ளார். அதுபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் ஆகியோர் ஒன்பதாவது அணிக்கு ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் ஏற்கனவே ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையின் இணை உரிமையாளர்களில் ஒருவராக உள்ளனர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையின் உரிமையாளர்களில் பிரீத்தி ஜிந்தாவும் ஒருவர். சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை உற்சாகப்படுத்தும் முக்கிய நபர்களில் தெலுங்கு நடிகர் வெங்கடேசும் ஒருவர்.
நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ராதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.