மாஸ்டர் டீசர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்


மாஸ்டர் டீசர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 14 Nov 2020 12:53 PM GMT (Updated: 14 Nov 2020 12:53 PM GMT)

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து 'மாஸ்டர்' பின்வாங்கியது.

பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு டீஸரை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தது. இதன்படி இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியானது. ஒரு நிமிடம் 30 வினாடிகள் ஓடக்கூடிய இந்த டீசரை பார்த்து விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Next Story