சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தின் டீசர் வெறித்தனம் - இயக்குநர் அட்லி பாராட்டு + "||" + Massssssssssssssster verithanam teaser actorvijay atlee

மாஸ்டர் படத்தின் டீசர் வெறித்தனம் - இயக்குநர் அட்லி பாராட்டு

மாஸ்டர் படத்தின் டீசர் வெறித்தனம் - இயக்குநர் அட்லி பாராட்டு
தற்போது மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னை,

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "மாஸ்டர்". இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஷாந்தனு,"கைதி"பட புகழ் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், "வாத்தி கம்மிங்" பட்டித் தொட்டியெல்லாம் பரவி பட்டையை கிளப்பியது.

ஆனால் எதிர்பாரதவிதமாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது.

இதனிடையே சூர்யாவின் "சூரரைப் போற்று" ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படமானது நிச்சயம் திரையரங்கில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து பேட்டியளித்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் படம் நிச்சயமாக திரையரங்கில் மட்டுமே வெளியாகும் எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து படக்குழு தீபாவளிபண்டிகையான இன்று மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகும் எனக் கூறியது. அதன்படி தற்போது மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அத்துடன் #MasterTeaser என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டீசர் வெறித்தனம்: நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என இயக்குநர் அட்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான 8 மாதங்களில் கடன் தொல்லையால் புரோட்டா மாஸ்டர் தற்கொலை
திருவேற்காட்டில் திருமணமான 8 மாதங்களில் கடன் தொல்லையால் மனமுடைந்து புரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்தார்.
2. 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி
'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
3. 'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட்
'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட் செய்துள்ளார்.
4. 'மாஸ்டர்' பற்றி மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு - பட தயாரிப்பு நிறுவனம் தகவல்
நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.