சினிமா செய்திகள்

ரசிகர்களை கவர்ந்த விஜய் பட டிரெய்லர் + "||" + Vijay movie trailer that impressed the fans

ரசிகர்களை கவர்ந்த விஜய் பட டிரெய்லர்

ரசிகர்களை கவர்ந்த விஜய் பட டிரெய்லர்
டிரெய்லர் விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்தனர்.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிப்போனது. தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்த்தும் ரிலீசாகவில்லை. ரசிகர்கள் ஏமாற்றத்தை போக்க மாஸ்டர் படத்தின் டிரெய்லரை தியேட்டர்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தீபாவளியன்று வெளியிட்டனர். டிரெய்லரில் விஜய்யின் கதாபாத்திரம் ஜேடி என்பது தெரிய வந்துள்ளது. ஜேடி ஒரு கல்பிரிட் என்று ஒருவர் கூற வாத்திக்கு இவ்ளோ தைரியம் எங்கிருந்து வந்தது என்று விஜய் சேதுபதி கோபமாக பேசுகிறார். ஒரு ஸ்டூடண்ட் இவ்வளவு பிரச்சினை பண்ணுகிறார் என்றால் டிஸ்மிஸ் பண்ண வேண்டியதுதானே என்று மாளவிகா மோகனன் கேட்க ஜேடி ஸ்டூடண்ட் இல்லை என்கிறது இன்னொரு குரல். டிரெய்லரில் அதிரடி சண்டைகள். சேசிங் காட்சிகள் உள்ளன.

விஜய்யும், விஜய் சேதுபதியும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளும் உள்ளன. டிரெய்லர் விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்தனர். டிரெய்லரில் விஜய் பேசும் வசனம் எதுவும் இடம்பெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
விஜய் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
2. விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் நள்ளிரவு ஓடிடி தளத்தில் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் நள்ளிரவு ஓடிடி தளத்தில் வெளியானது.
3. ‘மாஸ்டர்' படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் -டைரக்டர் லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படத்தை டைரக்டு செய்துள்ளார்.
4. கொத்தமல்லி தழைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்
விவசாயிகளிடம் விலைக்கு வாங்கிய கொத்தமல்லி தழைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்.
5. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்
விஜய்யின் மாஸ்டர் படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா என்று டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.