சினிமா செய்திகள்

கொரோனாவால் தாமதம் சிவகார்த்திகேயன் படம் தள்ளிவைப்பு + "||" + Delayed Sivakarthikeyan film postponed by Corona

கொரோனாவால் தாமதம் சிவகார்த்திகேயன் படம் தள்ளிவைப்பு

கொரோனாவால் தாமதம் சிவகார்த்திகேயன் படம் தள்ளிவைப்பு
கொரோனா தாமதம் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் சில படங்களை திரைக்கு கொண்டு வர இயலவில்லை. அந்த பட்டியலில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் 7 மாதங்களாக முடங்கி தற்போது மீண்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி உள்ளன. தியேட்டர்களையும் திறந்துள்ளனர். தீபாவளிக்கு 6 புதிய படங்கள் வந்துள்ளன. கொரோனா தாமதம் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் சில படங்களை திரைக்கு கொண்டு வர இயலவில்லை. அந்த பட்டியலில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் உள்ளது. ஹீரோ படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் உருவாகும் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடப்பதாக கூறப்பட்டது. பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையில் தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடந்தன. கொரோனாவால் பட வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தினால் தற்போது அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். அடுத்து சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் நடிக்க உள்ளார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துள்ளது. இந்த படத்தை ரவிகுமார் இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் எதிரொலி: என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைப்பு மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து இந்த மாதம் நடைபெற இருந்த என்ஜினீயரிங் (ஜே.இ.இ.) பிரதான நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
2. ரம்ஜான் பண்டிகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் ஏற்கனவே திரைக்கு வருவதில் தாமதம் ஆனது.
3. தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு
சட்டமன்ற தேர்தல் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.
4. “என்னை வைத்து படம் எடுப்பது கஷ்டமா?” - சாய் பல்லவி விளக்கம்
தன்னை வைத்து படம் எடுப்பது கஷ்டமா? என்பது குறித்து நடிகை சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.