சினிமா செய்திகள்

துபாயில் வீடு வாங்கிய நடிகர் மோகன்லால் + "||" + Actor Mohanlal buys a house in Dubai

துபாயில் வீடு வாங்கிய நடிகர் மோகன்லால்

துபாயில் வீடு வாங்கிய நடிகர் மோகன்லால்
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் செய்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
வானுயர்ந்த அழகிய கட்டிடங்களுடன் ஜொலிக்கும் துபாயில் குடியேறவும் சொத்துகள் வாங்கி குவிக்கவும் பிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டினர் பலர் இங்கு சொந்தமாக வீடுகள் வைத்து இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நடிகர்-நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள். இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு பாம் ஜுமைரா தீவில் சொந்தமாக 8,500 சதுர அடியில் 2 அடுக்குமாடி மற்றும் 6 படுக்கை அறைகள் கொண்ட வீடு உள்ளது. இந்தி நட்சத்திர தம்பதிகள் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு துபாயில் ஜுமைரா கோப் எஸ்டேட்ஸ் என்ற பகுதியில் உள்ள சான்ச்சூவரி பால்ஸ் என்ற இடத்தில் சொந்தமாக ஆடம்பர பங்களா உள்ளது. இங்கு மொத்தம் 96 வீடுகள் மட்டுமே உள்ளனவாம். இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலும் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் செய்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. 2010-ம் ஆண்டிலும் துபாயில் ரூ.3.50 கோடிக்கு அவர் வீடு வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா கட்டுப்பாடு மீறல்: ரசிகர்களை கண்டித்த நடிகர் அஜித்குமார்
கொரோனா கட்டுப்பாடு மீறல்: ரசிகர்களை கண்டித்த நடிகர் அஜித்குமார் செல்பி எடுத்தவரின் செல்போனை பறித்தார்.
2. நீண்ட தூரம் நடந்துசென்று ஓட்டு போட்ட நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை ஓட்டு போட கிளம்பினார். காரை தவிர்த்து விட்டு ஒன்றே கால் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேளச்சேரிக்கு உட்பட்ட தியோசப்பிக்கல் பள்ளி வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்றார்.
3. பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.
4. டைரக்டரான மோகன்லால்
மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழில் இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5. ஹாலிவுட் நடிகர் 5-வது திருமணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.