சினிமா செய்திகள்

‘நெற்றிக்கண்’ டிரெய்லர் பார்வையற்றவராக நடிக்கும் நயன்தாரா + "||" + Netrikkan Trailer Nayanthara pretending to be blind

‘நெற்றிக்கண்’ டிரெய்லர் பார்வையற்றவராக நடிக்கும் நயன்தாரா

‘நெற்றிக்கண்’ டிரெய்லர் பார்வையற்றவராக நடிக்கும் நயன்தாரா
நயன்தாரா 2003-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இன்றுவரை நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார்.
நேற்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாள் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது. பலரும் வாழ்த்துகளை பதிவு செய்தனர். தற்போது நயன்தாரா நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 65-வது படம். 1981-ல் வெளியான ரஜினிகாந்தின் நெற்றிக்கண் தலைப்பை வாங்கி இந்த படத்துக்கு வைத்துள்ளனர். இதில் நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கிறார். படத்தின் டிரெய்லரை பிறந்த நாளையொட்டி வெளியிட்டனர். ஒரு ஊர்ல பாவப்பட்ட ஆட்டுக்குட்டிங்க நிறைய இருந்துச்சாம், அதை தெரிஞ்சுகிட்ட கெட்ட நரி அதோட வேலையை காமிச்சுக்கிட்டே இருந்துச்சாம். அப்போ ஒரு தைரியமான ஆடு அந்த நரி விழுவதற்காக ஒரு குழியை தோண்டி வச்சுச்சாம். அந்த நரியும் குழில நல்லபடியா விழுந்துச்சாம் என்று நயன்தாரா கதை சொல்வதுபோல் அந்த டிரெய்லர் திகிலாக உள்ளது. இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மலையாளத்தில் நயன்தாரா நடிக்கும் நிழல் படத்தின் முதல் தோற்றமும் நேற்று வெளியானது. நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.