சினிமா செய்திகள்

2 கதாநாயகிகளுடன் இரட்டை வேடங்களில் கார்த்தி + "||" + Karthi in double roles with 2 heroines

2 கதாநாயகிகளுடன் இரட்டை வேடங்களில் கார்த்தி

2 கதாநாயகிகளுடன் இரட்டை வேடங்களில் கார்த்தி
கார்த்தி கதாநாயகனாக நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாராகிறது. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. ‘இரும்புத்திரை,’ ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் டைரக்டு செய்கிறார்.
கார்த்தி கதாநாயகனாக நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாராகிறது. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. ‘இரும்புத்திரை,’ ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் டைரக்டு செய்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அவருடைய இசையில், ஒரு பாடல் பதிவானது.

இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 2 பிரபல கதா நாயகிகள் நடிக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடை பெறுகின்றன.

எஸ்.லட்சுமன்குமார் தயாரிக்கிறார். அனைத்து அம்சங்களையும் கொண்ட ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது.

கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த ‘சிறுத்தை’ படம் வெற்றி கரமாக ஓடி தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் லாபத்தை கொடுத்தது. அதன்பிறகு அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் இதுதான் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வைரலாகும் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது.
2. ‘சுல்தான்’ படக்குழுவினரிடம் கார்த்தி பிரியாவிடை- படப்பிடிப்பு முடிவடைந்தது
‘பருத்தி வீரன்‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி, இதுவரை 19 படங்களில் நடித்து இருக்கிறார்.