சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் காயம் + "||" + Actor Ajith Kumar injured in shooting

படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் காயம்

படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் காயம்
அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்று இந்த காட்சி படமாக்கப்பட்டது.
சென்னை,

நடிகர் அஜித்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். வினோத் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்ததை தொடர்ந்து மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தினர். அஜித்குமார் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். சண்டை காட்சியை படமாக்கினர்.

அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்று இந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது திடீரென்று பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வுக்கு பின் மீண்டும் அந்த காட்சியில் அஜித்குமார் நடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பினார்.