சினிமா செய்திகள்

அவதூறு கருத்து அக்‌ஷய்குமார் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு + "||" + Defamation suit Akshay Kumar sues for Rs 500 crore

அவதூறு கருத்து அக்‌ஷய்குமார் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

அவதூறு கருத்து அக்‌ஷய்குமார் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்காக தயாரான லட்சுமி படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் அக்‌ஷய்குமார் மீது யூடியூப் சேனலொன்றில் அவதூறு கருத்துகளை ரஷீத் சித்திக் என்ற கட்டிட என்ஜினீயர் பேசி இருந்தார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி கனடா தப்பி செல்ல அக்‌ஷய்குமார் உதவ முயன்றார் என்றும் சுஷாந்த் சிங் சினிமாவில் வளர்ந்தது அக்‌ஷய்குமாருக்கு பிடிக்கவில்லை என்றும் தோனி படத்தில் நடிக்க சுஷாந்த் சிங் தேர்வானதிலும் அக்‌ஷய்குமாருக்கு அதிருப்தி இருந்தது என்றும் பேசினார். சுஷாந்த் சிங் மரணம் குறித்து மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா ஆகியோருடன் அக்‌ஷய்குமார் ரகசிய பேச்சுவார்த்தையும் நடத்தி உள்ளார் என்றும் கூறி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் அக்‌ஷய்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஷீத் சித்திக் மீது அக்‌ஷய்குமார் ரூ.500 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.