சினிமா செய்திகள்

பேரறிவாளனை விடுவிக்க நடிகர்கள் வற்புறுத்தல் + "||" + Persuasion of the actors to release Perarivalan

பேரறிவாளனை விடுவிக்க நடிகர்கள் வற்புறுத்தல்

பேரறிவாளனை விடுவிக்க நடிகர்கள் வற்புறுத்தல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்யும்படி நடிகர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்யும்படி நடிகர்கள் வற்புறுத்தி உள்ளனர். நடிகர் பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காத குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால் அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள வீடியோவில், “உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆளுநர் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அற்புதம்மாளின் 29 வருட போராட்டம் குற்றமற்றவருக்கு விடுதலை கொடுக்கும்படி வேண்டி கேட்கிறது. தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரம் விடுதலை செய்ய வேண்டும்” என்று பேசி உள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தீர்ப்புக்கு பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்கு மூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்” தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்
“ரசிகர்களுக்கு கொரோனா பயம் வராமல் இருக்க நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” என்று தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
2. நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பது இல்லை - பிரகாஷ் ராஜ்
நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பது இல்லை என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
3. நடிகர்களை ஏரிக்கு அழைத்து சென்ற சுற்றுச்சூழல் காவலர்கள் 3 பேர் பணிநீக்கம்: மாவட்ட வன அதிகாரி நடவடிக்கை
நடிகர்களை ஏரிக்கு அழைத்து சென்ற சுற்றுச்சூழல் காவலர்கள் 3 பேரை பணிநீக்கம் செய்து மாவட்ட வன அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.