மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்?


மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்?
x
தினத்தந்தி 20 Nov 2020 9:04 PM GMT (Updated: 2020-11-21T02:34:36+05:30)

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்புக்கு ஏற்கனவே தடைகள் ஏற்பட்டன.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்புக்கு ஏற்கனவே தடைகள் ஏற்பட்டன. கடந்த வருடம் ஜனவரி மாதம் படப்பிடிப்பை தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார். அதன்பிறகு படப்பிடிப்பை தொடங்கியதும் கிரேன் சரிந்து உயிரிழப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கொரோனாவும் படப்பிடிப்பை முடக்கி போட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடிக்க தயாராகி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டது. இயக்குனர் ஷங்கரும் படத்தில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியதாகவும் பேசினர். இதனை பட நிறுவனம் மறுத்தது. இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் விக்ரம், இந்தியன்-2 ஆகிய இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story