சினிமா செய்திகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு + "||" + Tamil Film Producers Association election completed

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு
சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவடைந்தது.
சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல், தற்போது நிறைவடைந்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.

இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1,303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1,050 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இதற்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி
தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்
புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றுள்ளதால், இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் கிளம்பி வருகின்றன.
3. விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்
புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றுள்ளதால், இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் கிளம்பி வருகின்றன.