மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்


மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
x
தினத்தந்தி 23 Nov 2020 12:36 AM GMT (Updated: 2020-11-23T06:06:40+05:30)

2008-ல் வெளியான ஜானே து யா ஜானே நா என்ற இந்தி படம் மூலம் இம்ரான்கான் கதாநாயகனாக அறிமுகமானார்.

பிரபல இந்தி இளம் நடிகர் இம்ரான்கான். இவர் நடிகர் அமீர்கானின் சகோதரி மகன் ஆவார். 2008-ல் வெளியான ஜானே து யா ஜானே நா என்ற இந்தி படம் மூலம் இம்ரான்கான் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஹிட்நேப், லக், ஐ ஹேட் லவ் ஸ்டோரி, டெல்லி பெல்லி, ஹோரி தேரே பியார் மெய்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக அவரது நடிப்பில் கட்டி பட்டி படம் வந்தது. முதல் படத்துக்கு பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இம்ரான்கானை விட்டு அவரது மனைவி அவந்திக்காக மாலிக்கும் பிரிந்து சென்று விட்டார். மகள் இமராவும் தாயுடன் இருக்கிறார். இதனால் விரக்தியில் இருந்த இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகி விட்டார். மனைவி பிரிந்து விட்டார். சினிமா வாழ்க்கையும் போய்விட்டது என்று ரசிகர்கள் பலரும் அவர் மீது பரிதாபப்பட்டு வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.


Next Story