கொச்சையான தாக்குதல்கள் அரசியலுக்கு வரலாமா என்று யோசிக்கிறேன் - நடிகை கஸ்தூரி


கொச்சையான தாக்குதல்கள் அரசியலுக்கு வரலாமா என்று யோசிக்கிறேன் - நடிகை கஸ்தூரி
x
தினத்தந்தி 23 Nov 2020 12:50 AM GMT (Updated: 23 Nov 2020 12:50 AM GMT)

நடிகை கஸ்தூரி முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.

“நான் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவதாக ஊரே பேசியதால் ஒரு மறுப்பு வெளியிட்டேன். நான் பா.ஜ.க.வில் சேரவில்லை. இன்றுவரை நான் அந்த எண்ணத்தில் இல்லவே இல்லை. எந்த கட்சியாக இருந்தாலும், தவறை விமர்சிக்க தயங்கியதில்லை. அனைத்து கட்சிகளிலும் இருந்து எனக்கு அழைப்பு வந்த வண்ணமே உள்ளது. நான் அவசரப்படவில்லை. எனக்கு அரசியல் என்றால் மக்கள் சேவை, கட்சியில் சேர்ந்து கோடி கோடியாக சுருட்டுவது இல்லை. ஆனால் அந்த மறுப்புக்கு வந்த பின்னூட்டங்களை படித்த பின் குறிப்பாக திராவிட பகுத்தறிவு கட்சியினரின் கொச்சையான தாக்குதல்களை சந்திக்கையில்; எதிராளி ஜெயித்து விடுவானோ என்ற பயத்தால் வரும் வன்மத்தை , வெறுப்பை, எதிர்கொள்ள வேண்டி வரும்போது வதந்தியை உண்மையாக்கி விடலாமா என்று தோன்றுகிறது. இதுவரை எந்த கட்சியின் பாலும் சாயாத நான் என்னை மதித்து வரவேற்கும் ஒரு கட்சியில் சேரலாமா என்று முதன் முறையாக யோசிக்கிறேன். இதற்கு முழு காரணம், முழு பொறுப்பு, பகுத்தறிவு பாசறையின் பாதுகாவலர்கள்தான்.” இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

Next Story