நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சலா? திடீர் வதந்திக்கு மறுப்பு


நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சலா? திடீர் வதந்திக்கு மறுப்பு
x
தினத்தந்தி 23 Nov 2020 12:55 AM GMT (Updated: 2020-11-23T06:25:01+05:30)

அரசியலில் ஈடுபடாமல் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்றும் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் அவரது பெயரில் ஒரு அறிக்கை வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடாமல் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்றும் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் அவரது பெயரில் ஒரு அறிக்கை வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த் அந்த அறிக்கை என்னுடையது அல்ல. ஆனாலும் எனது உடல் நிலை குறித்து அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் உண்மைதான் என்று கூறியிருந்தார். இதனால் அவர் அரசியலுக்கு வருவது கேள்விக்குறியாக உள்ளது. மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளத்தில் நேற்று தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உடல்நிலை குறித்து பலரும் விசாரிக்க தொடங்கினர். இது வதந்தி என்று ரஜினிகாந்தின் செய்தி தொடர்பாளர் மறுத்தார். அவர் கூறும்போது, “ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என்று பரவிய தகவலில் உண்மை இல்லை. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அவர் ஆரோக்கியத்தோடு உள்ளார். போயஸ் தோட்ட இல்லத்தில்தான் இருக்கிறார்” என்று கூறினார்.

Next Story