நடிகை அதுல்யாவுக்கு டைரக்டர் எதிர்ப்பு


நடிகை அதுல்யாவுக்கு டைரக்டர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 23 Nov 2020 8:04 PM GMT (Updated: 2020-11-24T01:34:28+05:30)

தமிழில் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப்பிடிக்க உத்தரவு, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதுல்யா ரவி தற்போது என் பெயர் ஆனந்தன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப்பிடிக்க உத்தரவு, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதுல்யா ரவி தற்போது என் பெயர் ஆனந்தன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக வருகிறார். ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இந்த படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. இந்த நிலையில் அதுல்யா ரவியை இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்த அதுல்யா ரவி ஒத்துழைப்பு தரவில்லை. சுசீந்திரன், சமுத்திரக்கனி போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்ததால் எங்களை உதாசீனம் செய்தார். எங்கள் படம் சர்வதேச விருது பெற்ற போதெல்லாம் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட மறுத்தார். படத்தின் முதல் தோற்ற போஸ்டர், டிரெய்லர் என படத்தின் எந்த ஒரு விளம்பரப்படுத்தும் நிகழ்விலும் அவர் தனது பங்களிப்பை தரவில்லை. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நடிகைகள் கலந்துகொண்டே ஆகவேண்டும் என நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்” என்றார்.

Next Story