சினிமா செய்திகள்

புதிய படத்தில் சூர்யா ஜோடியாக ராஷ்மிகா? + "||" + Rashmika paired with Surya in new film?

புதிய படத்தில் சூர்யா ஜோடியாக ராஷ்மிகா?

புதிய படத்தில் சூர்யா ஜோடியாக ராஷ்மிகா?
குறுகிய காலத்திலேயே மளமளவென வளர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் ராஷ்மிகாவை இப்போது சூர்யா படத்துக்கும் படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சூர்யாவின் சூரரை போற்று படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்து புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். கிராமத்து கதையம்சத்தில் அதிரடி படமாக தயாராகிறது. இதில் சூர்யா ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்திலும் நடிக்கிறார். குறுகிய காலத்திலேயே மளமளவென வளர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் ராஷ்மிகாவை இப்போது சூர்யா படத்துக்கும் படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நவம்பர் 12-ல் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியீடு - நடிகர் சூர்யா
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
2. நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை"-சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை" என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
3. சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்: தலைமை நீதிபதி சாஹிக்கு முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம்
சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம் என்று தலைமை நீதிபதி சாஹிக்கு முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.
4. படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதா? சூர்யாவுக்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு
பெரிய நடிகர் படம் ஓ.டி.டி.யில் வெளியாவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதையடுத்து தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
5. ஒடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியிடப்படுவது ஏன்? சூர்யா விளக்கம்
ஓடிடி தளத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.