சினிமா செய்திகள்

தொழில் அதிபரை ரகசியமாக மணந்த திருமண புகைப்படத்தை வெளியிட்ட சனாகான் + "||" + Sanakhan posted the wedding photo of the businessman secretly getting married

தொழில் அதிபரை ரகசியமாக மணந்த திருமண புகைப்படத்தை வெளியிட்ட சனாகான்

தொழில் அதிபரை ரகசியமாக மணந்த திருமண புகைப்படத்தை வெளியிட்ட சனாகான்
தமிழில் ஈ, சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, தலைவன், பயணம், ஆயிரம் விளக்கு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்தவர் சனாகான்.
தமிழில் ஈ, சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, தலைவன், பயணம், ஆயிரம் விளக்கு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்தவர் சனாகான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். சனாகானும், மும்பையை சேர்ந்த நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவரும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளும் கூறினார்கள். இதையடுத்து சினிமாவை விட்டு விலகி சமூக சேவையில் ஈடுபடப்போவதாகவும், திரையுலகை சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் சனாகான் அறிவித்தார். இந்த நிலையில் சனாகான் திடீரென்று சூரத்தை சேர்ந்த தொழில் அதிபர் முப்தி அனாஸ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து சனாகான் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தற்போது திருமணமாகி கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சனாகான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.