சினிமா செய்திகள்

குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன் + "||" + Actress Meera Mithun clashes with Khushboo

குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்

குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்
குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்.

நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரது காரில் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் குஷ்பு அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்த நிலையில் குஷ்புவின் அரசியல் நடவடிக்கைகளை நடிகை மீராமிதுன் விமர்சித்து உள்ளார்.

டுவிட்டரில் மீரா மிதுன் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ சீட்டுக்கு தி.மு.க கட்சியில் சேர்ந்து 10 வருடம் தி.மு.க ஆட்சிக்கே வர முடியவில்லை. எம்.பி. சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 10 வருடம் காங்கிரஸ் ஆட்சிக்கே வரமுடியவில்லை. இப்போது பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறீர்களே மேடம் குஷ்பு. கார் விபத்து டிராமா. எதிர்காலம் தேருமா? கோலிவுட் மாபியாக்களால்தான் குஷ்பு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். திட்டம் என்ன குஷ்பு?” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து குஷ்பு யார் பெயரையும் குறிப்பிடாமல் தனது டுவிட்டர் பக்கத்தில், “மோசமானவர் என்று நிரூபித்தவரும், கவனத்தை ஈர்க்க பெயர் போனவருமான நடிகை எனது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார். நான் என்ன செய்வது” என்று குறிப்பிட்டு உள்ளார். குஷ்புவின் பதிவை பார்த்த அவரது ஆதரவாளர்கள் மீரா மிதுனைதானே சொல்கிறீர்கள். அவரை பொருட்படுத்தாமல் உங்கள் பணியை தொடருங்கள். மீராமிதுன் எல்லோரையுமே வம்புக்கு இழுக்கிறார் என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குஷ்பு, பூனம் தில்லான் 80-களின் தோழிகளை சந்தித்த நடிகை நதியா
தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நதியா. இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன.
2. பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை திருவையாறில் குஷ்பு பேட்டி
பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என திருவையாறில் குஷ்பு கூறினார்.
3. பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும் நடிகை குஷ்பு பேட்டி
பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.
4. கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், விசிக தர்ணா போராட்டம்
பாஜக - விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.
5. திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.