சினிமா செய்திகள்

சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம் + "||" + Was Surya's Vadivasal film dropped?

சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம்

சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம்
கொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
சூர்யா நடித்த சூரரை போற்று படம் தீபாவளிக்கு ஓ.டி.டி.யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படம் ஜல்லிக்கட்டு கதை என்றும், சூர்யா மாடுபிடி வீரராக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாசை ஒப்பந்தம் செய்தனர். 

இந்த நிலையில் கொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து வேறு படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி உள்ளார். 

சூர்யாவும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார் என்று வலைத்தள தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை வாடிவாசல் படக்குழு மறுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “குறிப்பிட்ட டுவிட்டர் கணக்கு என்னுடையது அல்ல. 

என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். எண்ணியது எண்ணியபடி. சொல்லியது சொல்லியபடி, வெற்றிமாறன் இயக் கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் வலம் வரும். வாகை சூடும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 947 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 947 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2. நாளுக்கு நாள் வேகமாக பரவும் தொற்று: தமிழகத்தில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவுகிறது. ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 284 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் புதிதாக 284 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
4. விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு வெறும் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ரெயில் கொரோனா அச்சம் காரணம்
கொரோனா அச்சம் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வெறும் 30 பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது.
5. ஒரே நாளில் 462 பேருக்கு கொரோனா
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 5612 பேருக்கு பரிசோதனை செய்தலில், புதிய உச்சமாக 462 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்