சினிமா செய்திகள்

காதலித்து ஏமாந்ததாக பிரபல நடிகை வருத்தம் + "||" + Falling in love and obsessed Famous actress upset

காதலித்து ஏமாந்ததாக பிரபல நடிகை வருத்தம்

காதலித்து ஏமாந்ததாக பிரபல நடிகை வருத்தம்
தமிழில் பிரபுதேவா, பார்த்திபன் நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரேணுதேசாய். தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
பவன் கல்யாண் ஜோடியாக பத்ரி, ஜானி ஆகிய படங்களில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். ரேணு தேசாய் 2-வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. இதனை அவர் உறுதிப்படுத்தவில்லை. சமூக வலைத்தள பக்கத்தில் ரேணுதேசாய் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் காதல் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து ரேணுதேசாய் கூறும்போது, “காதல் ஜெயித்தால் மகிழ்ச்சியை தரும். தோல்வி அடைந்தால் வேதனையை கொடுக்கும். காதல் என்பது வாழ்வில் ஒரு பகுதி மட்டும்தான். வாழ்க்கை முழுவதும் காதலில் இல்லை. வேறு விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காதலில் தோற்கும் போது தற்கொலை செய்து கொள்ளும் முடிவை யாரும் எடுக்கக்கூடாது. அதில் இருந்து மீள வேண்டும். காதலில் உதாசினம் செய்தால் அதை தாங்க முடியாது. நானும் காதலித்து ஏமாந்து இருக்கிறேன். கவனத்தை வேறு விஷயங்களில் திருப்பினால் வலியில் இருந்து மீள முடியும்” என்றார்.