சினிமா செய்திகள்

தொழில் அதிபருடன் நடிகை ரகசிய திருமணம் + "||" + With the Chancellor of the Exchequer Actress secret marriage

தொழில் அதிபருடன் நடிகை ரகசிய திருமணம்

தொழில் அதிபருடன் நடிகை ரகசிய திருமணம்
தமிழில் விஜய்யுடன் பைரவா, சர்கார், அஜித்குமாரின் விஸ்வாசம், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் ஆகிய படங்களில் நடித்தவர் பாப்ரி கோஷ்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் பெங்காலி படங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கிறார். நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பாப்ரி கோசும், தொழில் அதிபர் ஒருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை அவர் மறுக்கவில்லை. இந்த நிலையில் காதலரை பாப்ரி கோஷ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக திருமணத்துக்கு யாரையும் அழைக்காமல் எளிமையாக நடத்தியதாக கூறப்படுகிறது. திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. மணமகன் பெயரை பாப்ரி கோஷ் வெளியிடவில்லை.