சினிமா செய்திகள்

கொரோனா பாதித்த நடிகை கவலைக்கிடம் + "||" + Corona affected The actress is worried

கொரோனா பாதித்த நடிகை கவலைக்கிடம்

கொரோனா பாதித்த நடிகை கவலைக்கிடம்
இந்தி டி.வி. நடிகை திவ்யா பட்நாகர். யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய் டி.வி. தொடர் மூலம் பிரபலமானார்.
தேரா யார் ஹூன் மெயின் என்ற நகைச்சுவை தொடரில் நடித்தும் புகழ்பெற்றார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து திவ்யா பட்நாகரின் தாய் கூறும்போது, “6 நாட்களாக திவ்யாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதும் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆனாலும் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்றார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. காலமானார்
கொரோனா பாதித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. அரியானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.
2. கொரோனா பாதித்த பசவகல்யாண் தொகுதி காங். எம்.எல்.ஏ. நாராயணராவ் மரணம் எடியூரப்பா - தலைவர்கள் இரங்கல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பசவகல்யாண் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணராவ் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
3. முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா பாதித்த செல்ல நாய் பலி
முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா பாதித்த செல்ல நாய் பலியாகி உள்ளது.
4. 16 ஏரிகளை வெட்டிய சமூக ஆர்வலர்: கொரோனா பாதித்த கல்மனே காமேகவுடா உடல் நிலை கவலைக்கிடம் - தரமான சிகிச்சை அளிக்க குமாரசாமி வலியுறுத்தல்
16 ஏரிகளை வெட்டிய சமூக ஆர்வலரான கல்மனே காமேகவுடா உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது. இதனால் அவருக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசை குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
5. கொரோனா பாதித்த 22 நோயாளிகளிடம் இருந்து ரூ.24 லட்சம் வசூல் கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு - போலீஸ் ஐ.ஜி. ரூபா தகவல்
பெங்களூருவில் கொரோனா பாதித்த 22 நோயாளிகளிடம் இருந்து ரூ.24 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்கும்படி மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.