சினிமா செய்திகள்

பேய் கதையில் காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal in the ghost story

பேய் கதையில் காஜல் அகர்வால்

பேய் கதையில் காஜல் அகர்வால்
பேய் கதையில் காஜல் அகர்வால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதுமாதிரியான படங்கள் அதிகம் வருகின்றன. நடிகர், நடிகைகளுக்கும் பேய் கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. ஏற்கனவே நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, சமந்தா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் திகில் படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் காஜல் அகர்வாலும் பேய் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை டீகே இயக்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் சொன்ன கதை காஜல் அகர்வாலுக்கு பிடித்து போனதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 4 கதாநாயகிகள் நடிப்பதாகவும், அதில் ஒருவர் காஜல் அகர்வால் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாகவும் நடிக்கிறார். சமீபத்தில் கவுதம் என்பவரை மணந்து மாலத்தீவுக்கு தேனிலவு சென்று திரும்பி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேய் வேடத்தில் நடிக்க 4 மணி நேரம் ‘மேக்கப்’ போட்ட காஜல் அகர்வால்
‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான காஜல் அகர்வால், ஏறக்குறைய எல்லா பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.
2. ஆஸ்துமா அவதியில் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2. பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.
3. திகில் தொடரில் காஜல் அகர்வால்
முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். சூர்யாவும் வெப் தொடரில் நடிக்கிறார். தற்போது காஜல் அகர்வாலும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் வைபவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடரை வெங்கட்பிரபு இயக்குகிறார்.