சினிமா செய்திகள்

நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு + "||" + Actor Karthik's son and actor Gautam Karthik's cell phone flush

நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு

நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு
சென்னையில் சைக்கிளில் சென்ற நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள்.
சென்னை,

2013-ல் கடல் படத்தின் மூலமாகத் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் கெளதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் வெளியானது.

இந்நிலையில் இன்று காலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார் கெளதம் கார்த்திக். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள், அவரிடமிருந்த செல்போனைப் பறித்துச் சென்றார்கள்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கெளதம் கார்த்திக். இதன் அடிப்படையில் காவலர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.