சினிமா செய்திகள்

5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம் + "||" + Ready in 5 languages Prabhas new film

5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்

5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாஸ் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.
தொடர்ந்து நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு சலார் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் வரும் பிரபாசின் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். பிரஷான்த் நீல் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 5 மொழிகளில் வெளியான கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமானவர். தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்து விட்டு பிரபாஸ் படத்தை இயக்க வருகிறார். கே.ஜி.எப் படங்களை எடுத்த ஹோம்பாளே பிலிம்ஸ் விஜய் கிரகன்தூர், சலார் படத்தையும் அதிக பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர்.