சினிமா செய்திகள்

நடிகை ஜெயசித்ராவின் கணவர் காலமானார் + "||" + Veteran actress Jayachithra's husband and composer Amrish's father Ganesh passes away

நடிகை ஜெயசித்ராவின் கணவர் காலமானார்

நடிகை ஜெயசித்ராவின் கணவர் காலமானார்
நடிகை ஜெயசித்ராவின் கணவரும் இசையமைப்பாளர் அம்ரிஷின் தந்தையுமான கணேஷ், திருச்சியில் இன்று காலமானார்.
சென்னை,

குறத்தி மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி, குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திருச்சியில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட ஜெயசித்ரா, 1983-ல் கணேஷைத் திருமணம் செய்தார் ஜெயசித்ரா. இவர்களுடைய மகன் அம்ரிஷ், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக உள்ளார்.

ஜெய்சங்கர், சிவகுமார், கமலுடன் இணைந்து பல படங்களிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்தவர். இந்நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் இன்று திருச்சியில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

ஜெயசித்ராவின் கணவர்  மறைவுக்கு மறைவை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.