சினிமா செய்திகள்

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் ரூ.27 கோடி வசூல் + "||" + Nayanthara starrer 'Mookkuthi Amman' grossed Rs 27 crore

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் ரூ.27 கோடி வசூல்

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் ரூ.27 கோடி வசூல்
நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், ரூ.27 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
நயன்தாரா, ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் முன்னணி கதாநாயகி ஆனார். பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்தார். தமிழ் பட உலகில் அவர் ராசியான கதாநாயகியாக கருதப்பட்டார். அது, அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.

அவர் நடித்த தெலுங்கு படங்களும் வெற்றி பெற்றதால் அங்கேயும் பிரபல கதாநாயகி ஆனார். அவருடைய சம்பளம் கோடிகளில் உயர்ந்தது. இந்த சமயத்தில்தான் ‘மாயா’ படம் வந்தது. அது, அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டது. அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து நயன்தாராவுக்காக (கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து) கதையும், கதாபாத்திரங்களும் உருவாக்கப்பட்டன. ‘நானும் ரவுடிதான்,’ ‘அறம்’ போன்ற படங்களின் வெற்றி அவருடைய நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தின. நயன்தாரா, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆனார்.

சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. ரூ.13 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், இதுவரை ரூ.27 கோடி வசூல் செய்து இருக்கிறது. இதன் மூலம் தென்னிந்தியாவிலேயே வேறு எந்த கதாநாயகிக்கும் இல்லாத அளவுக்கு நயன்தாராவின் ‘மார்க்கெட்’ அந்தஸ்து உயர்ந்து இருக்கிறது. அவரை மையப்படுத்தி கதைகள் தயாராகி வருகின்றன.