சினிமா செய்திகள்

கூகுள் தேடலில் சூர்யா படம் சாதனை + "||" + Surya Image Record in Google Search

கூகுள் தேடலில் சூர்யா படம் சாதனை

கூகுள் தேடலில் சூர்யா படம் சாதனை
பிராந்திய மொழிப்படமான சூரரை போற்று கூகுள் தேடலில் அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து இருப்பது சாதனையாக கருதப்படுகிறது.
இந்திய அளவில் கூகுளில் ரசிகர்களால் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதல் இடம் சுஷாந்த் சிங் நடித்த தில் பெச்சாரா இந்தி படத்துக்கு கிடைத்துள்ளது. பிராந்திய மொழிப்படமான சூரரை போற்று கூகுள் தேடலில் அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து இருப்பது சாதனையாக கருதப்படுகிறது.

இதனை சூர்யா ரசிகர்கள் வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். இந்தியில் அஜய்தேவ்கான் நடித்த தன்ஹாஜி படம் 3-வது இடத்தையும், வித்யாபாலன் நடித்த சகுந்தலா தேவி 4-வது இடத்தையும், ஜான்வி கபூர் நடித்த குஞ்சன் சக்சேனா படம் 5-வது இடத்தையும், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்த லட்சுமி படம் 6-வது இடத்தையும், சடக் 7-வது இடத்தையும்,

டைகர் ஷெராப் நடித்த பாகி 3 படம் 8-வது இடத்தையும், எக்ஸ்ட்ராக்சன் 9-வது இடத்தையும், அமிதாப்பச்சனின் குலாபோ சித்தபோ படம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.