சினிமா செய்திகள்

மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா + "||" + Nayanthara paired with Vijay Sethupathi again

மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா

மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியும் நயன்தாராவும் தற்போது மீண்டும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடித்த நானும் ரவுடிதான் படம் 2015-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியும் நயன்தாராவும் தற்போது மீண்டும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். சமந்தாவும் இதில் இன்னொரு நாயகியாக வருகிறார்.

இந்த படத்தையும் விக்னேஷ் சிவனே இயக்குகிறார். இதன் படபூஜை சென்னையில் நேற்று நடந்தது. விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு தொடங்கியது. விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தை லலித்குமார், விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இளைஞர்களை கவரும் காதல் கதையம்சத்தில் இந்த படம் தயாராவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நயன்தாரா கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், மலையாளத்தில் நிழல் ஆகிய படங்களும் உள்ளன.