சினிமா செய்திகள்

நடிகைகள் போட்டியால் பட வாய்ப்பு குறைந்ததா? அஞ்சலி விளக்கம் + "||" + Did the actresses have less of a chance to shoot the competition? Anjali Description

நடிகைகள் போட்டியால் பட வாய்ப்பு குறைந்ததா? அஞ்சலி விளக்கம்

நடிகைகள் போட்டியால் பட வாய்ப்பு குறைந்ததா? அஞ்சலி விளக்கம்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலி தற்போது வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளார். புதுமுக நடிகைகள் வருகையாலும் பெரிய நடிகைகளுக்குள் நடக்கும் போட்டியாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து அஞ்சலி கூறியதாவது:-
சினிமா துறையில் நிறைய கதாநாயகிகள் வந்து விட்டனர். நடிகைகளுக்குள் நடக்கும் போட்டியால் எனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது என்று யாராவது சொன்னால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். சினிமாவில் நான் யாரையும் போட்டியாக நினைப்பது இல்லை. யாருடனும் சண்டையும் வைத்துக்கொள்ள மாட்டேன். என் மீது யாரும் குறையும் சொல்ல முடியாது. அனைத்து சக நடிகைகளுடனும் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. எந்த கதாபாத்திரத்தில் அவர்கள் நன்றாக நடித்து இருந்தாலும் அவர்களுக்கு போனிலோ நேரிலேயோ வாழ்த்துவதையும் பாராட்டுவதையும் வழக்கமாக வைத்து இருக்கிறேனே தவிர பொறாமைப்பட மாட்டேன்.‘

இவ்வாறு அஞ்சலி கூறினார்.