சினிமா செய்திகள்

இந்திய விமான படையிடம் மன்னிப்பு கேட்ட அனில்கபூர் + "||" + Anil Kapoor apologizes to Indian Air Force

இந்திய விமான படையிடம் மன்னிப்பு கேட்ட அனில்கபூர்

இந்திய விமான படையிடம் மன்னிப்பு கேட்ட அனில்கபூர்
படத்தின் டிரெய்லரில் விமானப்படை சீருடை அணிந்து மோசமான வார்த்தைகள் பேசியதற்காக இந்திய விமான படையிடம் மன்னிப்பு கேட்டார் பிரபல இந்தி நடிகர் அனில்கபூர்.
பிரபல இந்தி நடிகர் அனில்கபூர், ‘ஏகே வெர்சஸ் ஏகே’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். நடிகரின் மகளை இயக்குனர் கடத்தி மிரட்டுகிறார். மகளை நடிகர் எப்படி கண்டுபிடித்து மீட்கிறார் என்பது கதை. இதில் நடிகர் கதாபாத்திரத்தில் அனில்கபூரும் இயக்குனராக அனுராக்கும் நடித்துள்ளனர். 

இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டிரெய்லரில் அனில்கபூர் இந்திய விமான படையின் சீருடை அணிந்து கெட்ட வார்த்தை பேசுவதுபோன்று காட்சி உள்ளது. இதனை இந்திய விமான படை கண்டித்தது. சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது. 

இதையடுத்து அனில்கபூர் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘படத்தின் டிரெய்லர் சிலரை புண்படுத்தியதாக அறிந்தேன். விமானப்படை சீருடை அணிந்து மோசமான வார்த்தைகள் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கதைக்கு தேவையென்றதால் அந்த சீருடை அணிந்தேன். இந்திய விமானப்படையை அவமதிக்கும் நோக்கம் இல்லை. நமது வீரர்களின் தன்னலம் இல்லாத சேவையில் எனக்கு மரியாதை இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.