சினிமா செய்திகள்

சிவாஜி பட பெயரை பயன்படுத்த நடிகர் தனுசுக்கு எதிர்ப்பு + "||" + Opposition to actor Sagittarius for using Shivaji film name

சிவாஜி பட பெயரை பயன்படுத்த நடிகர் தனுசுக்கு எதிர்ப்பு

சிவாஜி பட பெயரை பயன்படுத்த நடிகர் தனுசுக்கு எதிர்ப்பு
சிவாஜி படம் கர்ணன் பெயரை பயன்படுத்த சிவாஜி சமூக நல பேரவை நடிகர் தனுசுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
தனுஷ் புதிதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி உள்ள கர்ணன் படத்தில் நடித்துள்ளார். கர்ணன் சிவாஜி கணேசன் நடித்த படத்தின் பெயர் ஆகும். ஏற்கனவே சிவாஜியின் திருவிளையாடல் பட பெயரில் தனுஷ் நடித்தபோது எதிர்ப்பு கிளம்பியதால் திருவிளையாடல் ஆரம்பம் என்று மாற்றினர். தற்போது கர்ணன் பெயரை பயன்படுத்த சிவாஜி சமூக நல பேரவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அந்த அமைப்பு சார்பில் தனுசுக்கு அனுப்பி உள்ள கடித்தத்தில், “சிவாஜியின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ‘கர்ணன்’ என்றாலே நினைவில் நிற்பது சிவாஜியின் ‘கர்ணன்’ திரைப்படம்தான். சரஸ்வதி சபதம், திருவிளையாடல், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது. ஏனெனில் அந்த திரைப்பட தலைப்பின் தனித்துவம் அப்படி. ஒரு சமூக திரைப்படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல. இது சிவாஜி ரசிகர்களை புண்படுத்தக்கூடியதாக அமையும். எனவே. ‘கர்ணன்’ என்ற தலைப்பினை மாற்றி அமைத்திட வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.