சினிமா செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட சித்ரா நடித்த படம் திரைக்கு வருகிறது + "||" + The movie starring Chitra who committed suicide is coming to the screen

தற்கொலை செய்து கொண்ட சித்ரா நடித்த படம் திரைக்கு வருகிறது

தற்கொலை செய்து கொண்ட சித்ரா நடித்த படம் திரைக்கு வருகிறது
தற்கொலை செய்து கொண்ட சித்ரா கதாநாயகியாக நடித்த கால்ஸ் என்ற படம் செப்டம்பர் மாதம் தொழில்நுட்ப பணிகளை தொடங்கி இந்த மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வர தயாரான நிலையில் உள்ளது.
தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமான சித்ரா சில தினங்களுக்கு முன்பு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை நடிகர்-நடிகைகளையும், ரசிகர்களையும் உலுக்கியது. டி.வி. நடிகையாக பிரபலமான சித்ராவுக்கு கால்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கொரோனா பரவலுக்கு முன்பே நடித்து முடித்து விட்டார். டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தரராஜன், தேவதர்ஷினி, வினோதினி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். ஜெ.சபரிஸ் இயக்கி உள்ளார். கால்ஸ் படத்தை ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இறுதிக்கட்ட பணிகள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் வரவில்லை. மீண்டும் செப்டம்பர் மாதம் தொழில்நுட்ப பணிகளை தொடங்கி இந்த மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வர தயாரான நிலையில் முதலும், கடைசியுமாய் நடித்த படத்தை பார்க்கும் முன்பாகவே சித்ரா இறந்து போனது படக்குழுவினருக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கால்ஸ் படத்தில் நடித்தபோது அணிந்த ஆடையையே அவர் தூக்கில் தொங்கியபோது உடுத்தி இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். படத்தில் சித்ராவின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.