சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாராக உயர்ந்த போதும் பழமையை மறக்காத நடிகர் ரஜினிகாந்த்! + "||" + Rajinikanth is an actor who has not forgotten the past despite being a superstar!

சூப்பர் ஸ்டாராக உயர்ந்த போதும் பழமையை மறக்காத நடிகர் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டாராக உயர்ந்த போதும் பழமையை மறக்காத நடிகர் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தை முதலாவதாக வாங்கிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

ரஜினிகாந்த் தன்னுடைய 70-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து கூறி வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார்.

அரசியலுக்கு வருவது பற்றி கூறிய ரஜினிகாந்த், எப்போது அரசியல் கட்சியை அறிவிப்பார்? என்று அவருடைய ரசிகர்கள் ஏங்கி காத்து இருந்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் ‘ஜனவரியில் கட்சி தொடக்கம் என்றும், அதுகுறித்து டிசம்பர் 31-ந்தேதி அறிவிக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சி கடலில் மேலும் ஒரு ஆனந்தமாக அவருடைய பிறந்தநாளும் நேற்று வந்தது.

நடிகர் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீடு முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அப்போது கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் ரஜினிகாந்த் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இந்தநிலையில் "இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல" என எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தை முதலாவதாக வாங்கிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது விலையுயர்ந்த காரை வைத்திருந்தாலும் அப்போது வைத்திருந்த TMU 5004 என்ற பதிவெண் கொண்ட அந்தக் காரை ரஜினி இன்று முதல் பராமரித்து வருவது இந்தப் புகைப்படத்தின் மூலம் தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது: தலைவர்கள் வாழ்த்து
51-வது தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2. நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு
இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
3. இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்
இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.
4. நடிகர் ரஜினிகாந்தின் தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இருக்கும் - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வராவிட்டாலும் அவருடைய தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு என்றும் இருக்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
5. என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க விரும்ப வில்லை; கட்சி தொடங்கவில்லை நடிகர் ரஜினிகாந்த் - பரபரப்பு அறிக்கை
கட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.