சினிமா செய்திகள்

ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை நடிகர் விஷால் தேர்தலில் போட்டி? + "||" + Sudden consultation with fans Actor Vishal contest in the election?

ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை நடிகர் விஷால் தேர்தலில் போட்டி?

ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை நடிகர் விஷால் தேர்தலில் போட்டி?
“தேர்தல் குறித்து விஷால் ஆலோசனையில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கமாக மாற்றி தனியாக கொடியையும் அறிமுகம் செய்தார். அந்த இயக்கத்துக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நிர்வாகிகளையும் நியமனம் செய்தார். தொடர்ச்சியாக அரசியலிலும் குதித்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடியானது. பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த அவர் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆதரவாளர்களுடன் மீண்டும் களம் இறங்குவது குறித்து தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து கேட்டுள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேர்தல் குறித்து விஷால் ஆலோசனையில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் அதிக தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்” என்றார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.