சினிமா செய்திகள்

சூப்பர் ரீயூனியன்: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலங்கள் சந்திப்பு: வைரலாகும் போட்டோ + "||" + Super Reunion: Celebrities Meet Big Boss leaving Home: Viral Photo

சூப்பர் ரீயூனியன்: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலங்கள் சந்திப்பு: வைரலாகும் போட்டோ

சூப்பர் ரீயூனியன்: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலங்கள் சந்திப்பு: வைரலாகும் போட்டோ
பிக் பாஸ் போட்டியாளர்களான சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, வேல்முருகன் மற்றும் ரேகா ஆகியோரின் ரீயூனியன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் 4
இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், சற்றே தள்ளிப் போய் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கோலாகலமான தொடக்க விழாவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி, 70வது நாளை அடைந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை இந்த முறையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரீயூனியன்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நடிகை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன் மற்றும் சம்யுக்தா ஆகிய 4 பேர் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டு எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.