சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு” வெளியாகும் நேரத்தை வெளியிட்ட சிலம்பரசன் + "||" + Eeswaran movie Tamil song - Silambarasan announce the release time

ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு” வெளியாகும் நேரத்தை வெளியிட்ட சிலம்பரசன்

ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு” வெளியாகும் நேரத்தை வெளியிட்ட சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கள் பாடலான “ தமிழன் பாட்டு” வெளியாகும் நேரத்தை சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்த, நிலையில் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், சிம்பு பாம்பை கையில் வைத்திருந்தது சர்ச்சையாகி விலங்கு நல வாரியம் கண்டனம் தெரிவித்த நிலையில், அது குறித்து படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் ஈஸ்வரன் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ள “ தமிழன் பாட்டு”  காலை பத்து மணிக்கு வெளியாகும் என்றும் லிரிக் வீடியோ மாலை 4. 50 மணிக்கு வெளியாகும் என்றும் சிலம்பரசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகளை முடித்த சிலம்பரசன் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. கிராபிக்ஸ் பாம்புக்கு ஆதாரம் கேட்டு நடிகர் சிம்புக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ்
கிராபிக்ஸ் பாம்புக்கு ஆதாரம் கேட்டு நடிகர் சிம்புக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது