சினிமா செய்திகள்

தலைவி படப்பிடிப்பு முடிந்தது ஜெயலலிதாவாக நடித்த கங்கனா நெகிழ்ச்சி + "||" + Leader shooting is over Kangana Ranaut as Jayalalithaa

தலைவி படப்பிடிப்பு முடிந்தது ஜெயலலிதாவாக நடித்த கங்கனா நெகிழ்ச்சி

தலைவி படப்பிடிப்பு முடிந்தது ஜெயலலிதாவாக நடித்த கங்கனா நெகிழ்ச்சி
தலைவி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கங்கனா ரணாவத் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இதில் எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும், சசிகலாவாக பூர்ணா, ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.எல்.விஜய் இயக்குகிறார். கொரோனா பரவலுக்கு முன்பே பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தினர்.

இந்த நிலையில் தலைவி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கங்கனா ரணாவத் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அத்துடன் ஜெயலலிதா தோற்றத்தில் இருவிரலை காட்டிய படி பொதுக்கூட்ட மேடையில் பேசுவதுபோன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், “‘தலைவி படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். இந்த கதாபாத்திரம் எந்த நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒன்று. ரத்தமும் சதையுமாக எனக்கு அமைந்தது. கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினேன். ஆனால் இப்போது திடீரென்று விடைபெறும் நேரம் வந்து விட்டது. படக்குழுவினருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
2. புத்தக பதிப்புரிமை மீறல் விவகாரம்; நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
ஆசிஷ் கவுல் என்ற எழுத்தாளர் ‘திதா: தி வாரியர் குயின் ஆப் காஷ்மீர்' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
3. ஹிருத்திக் ரோஷனுக்கு கோர்ட்டு சம்மன்
நடிகை கங்கனா ரணாவத்துக்கும், பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் கிருஷ் 3 இந்தி படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
4. நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன்
சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
5. நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார்; மும்பை கோர்ட்டு கருத்து
நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் என்று மும்பை கோர்ட்டு தெரிவித்துள்ளது.