சினிமா செய்திகள்

2020ல் அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ள திரைப்படம்: முதல் இடத்தில் “மாஸ்டர்”, 3வது இடத்தில் “வலிமை” + "||" + Most tweeted movie in 2020: "Master" in first place, "Valimai" in 3rd place

2020ல் அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ள திரைப்படம்: முதல் இடத்தில் “மாஸ்டர்”, 3வது இடத்தில் “வலிமை”

2020ல் அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ள திரைப்படம்: முதல் இடத்தில் “மாஸ்டர்”, 3வது இடத்தில் “வலிமை”
2020ம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் டுவீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
சென்னை, 

ஆண்டுதோறும் சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் குறித்து சர்வே எடுப்பது வழக்கம் . அந்தவகையில் இந்த வருடம் டுவிட்டரில் அதிகம் பதிவுகள் இடம்பெற்றுள்ள தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன்படி 2020ம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் டுவீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படம் பெற்றுள்ளது. அடுத்ததாக நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் சூர்யாவின் சூரரை போற்று 5வது இடத்தையும், ரஜினியின் தர்பார் 10 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

அதேபோல் நடிகர்கள் பற்றி அதிகம் டுவீட் செய்யப்பட்டுள்ள பட்டியலில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு முதலிடமும், பவன் கல்யாண் இரண்டாவது இடமும், நடிகர் விஜய் மூன்றாவது இடத்தையும், ஜூனியர் என்டிஆர் 4வது இடத்தையும், சூர்யா 5வது இடத்தையும், அல்லு அர்ஜுன் 6ம் இடத்தையும், ராம் சரண் 7ம் இடத்தையும், தனுஷ் 8வது இடத்தையும், மோகன்லால் 9வது இடத்தையும், சிரஞ்சீவி 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2020-ம் ஆண்டு விடைபெற்றது; 2021-ம் ஆண்டு பிறந்தது - அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
2021-ம் ஆண்டு பிறந்ததையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
2. 'ஒத்த செருப்பு' திரைப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநர் விருது
2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது புதுச்சேரி அரசு சார்பில் நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.
3. 'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசர்: சமூகவலை தளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசரை சமூகவலை தளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.