சினிமா செய்திகள்

அதிக மது அருந்தியதால் பிரபல நடிகை மரணம் + "||" + Because of drinking too much alcohol Death of famous actress

அதிக மது அருந்தியதால் பிரபல நடிகை மரணம்

அதிக மது அருந்தியதால் பிரபல நடிகை மரணம்
மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதையாக இந்தியில் தயாரான த டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பிரபலமானவர் ஆர்யா பானர்ஜி.
கொல்கத்தாவை சேர்ந்த இவர் மேலும் பல இந்தி மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். கொல்கத்தாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆர்யா பானர்ஜியின் வீடு 3 நாட்களாக உட்புறம் பூட்டி இருந்ததால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது ஆர்யா பானர்ஜி படுக்கையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக இருந்தது. ஆர்யா பானர்ஜி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆர்யா பானர்ஜி கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்றும், அவரது உடலில் அதிக அளவில் ஆல்கஹால் இருந்ததாகவும், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதுதான் அவரது மரணத்துக்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவரது மரணத்தில் இருந்த மர்மம் விலகி உள்ளது.