சினிமா செய்திகள்

படமாகும் செஸ் சாம்பியன் வாழ்க்கை விஸ்வநாதன் ஆனந்த் வேடத்தில் தனுஷ்? + "||" + The film is about the life of a chess champion In the role of Viswanathan Anand Dhanush

படமாகும் செஸ் சாம்பியன் வாழ்க்கை விஸ்வநாதன் ஆனந்த் வேடத்தில் தனுஷ்?

படமாகும் செஸ் சாம்பியன் வாழ்க்கை விஸ்வநாதன் ஆனந்த் வேடத்தில் தனுஷ்?
தமிழகத்தை சேர்ந்த புகழ் பெற்ற செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 தடவை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இவர் ஏற்கனவே இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா, மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு ஆகிய படங்களை இயக்கி உள்ளார். ஆனந்த் எல்.ராய் தற்போது அக்‌ஷய்குமார், தனுஷ், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கும் அத்ரங்கி ரே என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படம் முடிந்ததும் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் விஸ்வநாதன் ஆனந்த் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின், டோனி ஆகியோர் வாழ்க்கை படமாகி உள்ளது. கபில்தேவ் தலைமையிலான அணி உலக கோப்பையை வென்றதையும் படமாக்கி வருகிறார்கள். சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் வாழ்க்கையும் படமாக உள்ளது.