சினிமா செய்திகள்

5 தேசிய விருதுகள் பெற்ற கலை இயக்குனர் மரணம் + "||" + Received 5 National Awards Death of art director

5 தேசிய விருதுகள் பெற்ற கலை இயக்குனர் மரணம்

5 தேசிய விருதுகள் பெற்ற கலை இயக்குனர் மரணம்
பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 55-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
தமிழில் நாடோடி தென்றல், தாஜ்மஹால், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, நான் கடவுள் உள்பட பல படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அவரது அரங்குகள் அமைப்பு பாணிக்கு பட உலகினர் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இவர் சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருதுகளை 3 முறை பெற்றுள்ளார். சிறந்த ஆடை வடிவமைப்புகான 2 தேசிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்திக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. மரணம் அடைந்த கிருஷ்ணமூர்த்திக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.