சினிமா செய்திகள்

விமான நிலையத்தில் வைர கம்மலை தொலைத்த நடிகை ஜுஹி சாவ்லா + "||" + At the airport Gum lost diamond Actress Juhi Chawla

விமான நிலையத்தில் வைர கம்மலை தொலைத்த நடிகை ஜுஹி சாவ்லா

விமான நிலையத்தில் வைர கம்மலை தொலைத்த நடிகை ஜுஹி சாவ்லா
இந்தியில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜுஹி சாவ்லா. தமிழில் பருவராகம், நாட்டுக்கு ஒரு நல்லவன் படங்களில் நடித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், அஜய்தேவ்கான் ஜோடியாக நடித்துள்ளார். தொழில் அதிபர் ஜெய் மேத்தா என்பவரை 1995-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜுஹி சால்வா தனது வைர கம்மலை தொலைத்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் எனது பெட்டி படுக்கைகளை வண்டியில் வைத்து தள்ளியபடி 2-வது டெர்மினலில் 8-வது கேட்டை நோக்கி சென்றேன். அங்கு எமிரேட்ஸ் கவுண்ட்டருக்கு போய்விட்டு இமிக்ரேஷனில் பாதுகாப்பு சோதனைகள் செய்தேன். இதற்கு இடையில் எனது வைரக்கம்மல் தவறி எங்கோ விழுந்து விட்டது. அதை கண்டுபிடித்து தருபவருக்கு பரிசு கொடுப்பேன். இந்த வைர கம்மலை 15 வருடங்களாக தினமும் அணிந்தேன். இதனை கண்டுபிடிக்க உதவுங்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தடையை மீறி லிபியா நாட்டிற்கு சென்று திரும்பியவர் சென்னை விமான நிலையத்தில் கைது
இந்திய அரசு விதித்துள்ள தடையை மீறி லிபியா நாட்டிற்கு சென்று சென்னை திரும்பிய ஒருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
2. சட்டவிரோதமாக தங்கி இருந்தனர் சென்னை விமான நிலையத்தில் இலங்கை தமிழர் உள்பட 4 பேர் கைது
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை தமிழர் உள்பட 4 பேரை சென்னை விமான நிலையத்தில் கியூபிராஞ்ச் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
3. சட்டவிரோதமாக தங்கி இருந்தனர் சென்னை விமான நிலையத்தில் இலங்கை தமிழர் உள்பட 4 பேர் கைது
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை தமிழர் உள்பட 4 பேரை சென்னை விமான நிலையத்தில் கியூபிராஞ்ச் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.